12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

(02.01.2026 – வெள்ளிக்கிழமை)

இன்று விசுவாவசு தமிழ் வருடம், மார்கழி மாதம் 18-ஆம் நாள். வெள்ளிக்கிழமை என்பதால் சுப காரியங்களுக்கு ஏற்ற நாள். இன்று காலை 06.43 மணி வரை சதுர்த்தசி திதி, அதன் பின்னர் பௌர்ணமி. இரவு 08.16 மணி வரை மிருகசீரிஷம் நட்சத்திரம், பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சித்த யோகம் இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

நல்ல நேரம் காலை 9.30 முதல் 10.30 வரை, மாலை 4.30 முதல் 5.30 வரை. ராகு காலம் காலை 10.30 முதல் 12.00 வரை. எமகண்டம் மாலை 3.00 முதல் 4.30 வரை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்

புதிய பிரபலங்கள் அறிமுகமாகும் நாள். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும். நினைத்த பொருள் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணப்பற்றாக்குறை நீங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். மனஅமைதிக்குத் தியானம் உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

கல்வி மற்றும் தொழிலில் தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

சிம்மம்

வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டு. வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

பணப் பிரச்சினைகள் தீரும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

புதிய நட்பு மற்றும் தொடர்புகள் உருவாகும். அரசியல் சார்ந்தவர்களுக்கு பதவி வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

சந்திராஷ்டமம் காரணமாக இன்று பொறுமை அவசியம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

தனுசு

வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். குடும்ப பிரச்சினைகள் சுமுகமாக தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

உத்யோகத்தில் மதிப்பு உயரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

பங்குச் சந்தை மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

முக்கிய பொறுப்புகள் வெற்றிகரமாக நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை