Home » 120 அடி உயரத்தில் கிரேன் பழுது: நடுவானில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் – அதிர்வூட்டிய சம்பவம்”

120 அடி உயரத்தில் கிரேன் பழுது: நடுவானில் சிக்கிய கேரள சுற்றுலா பயணிகள் – அதிர்வூட்டிய சம்பவம்”

இடுக்கி ஸ்கை டைனிங் பரபரப்பு: 120 அடி உயரத்தில் இரண்டு மணி நேரம் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்!

கேரளாவின் இயற்கை சுவை, மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் சாகச அனுபவங்கள் சுற்றுலா பயணிகளை எப்போதும் கவர்ந்து தான் வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இச்சாகசங்கள் அச்சத்தை உருவாக்கும் சம்பவங்களாக மாறுகின்றன. அப்படியானதொரு அதிர்ச்சி நிகழ்வே இடுக்கியில் நடந்துள்ளது.

மூணாறு அருகே உள்ள அனச்சல் பகுதியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஸ்கை டைனிங்’ உணவகத்தில், சுற்றுலா பயணிகள் 120 அடி உயரத்தில் தூக்கி வைக்கப்பட்ட மேடையில் உணவருந்தும் அனுபவத்தை பெற முடிகிறது. கிரேன் மூலம் வானில் நிலை நிறுத்தப்படும் இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 16 பேர்வரை உணவருந்தலாம்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலிருந்து வந்த 5 பேர் மதியம் உணவகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு வானில் உணவருந்தும் சாகச அனுபவம் அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வான அனுபவம் திடீரென ஆபத்தாக மாறியது. கிரேனின் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் திடீரென செயலிழந்ததால், மேடையை கீழே இறக்க முடியாமல் போனது.

இதனால் சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 120 அடி உயரத்தில் சிக்கி தவித்த நிலையில் இருந்தனர். இடுக்கி சுற்றுலா மையமாக இருந்தாலும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது.

உதவி பணியாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் முயற்சித்த பிறகு கிரேனில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் ஸ்கை டைனிங் போன்ற சாகச அனுபவங்களில் பாதுகாப்பு மேம்படுத்தலின் அவசியத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *