சென்னை: கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு கட்டுமான அகாடமி (TAC) உயர் கல்வி பயிலும் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் (TNCWWB) பதிவு செய்துள்ள 10,000 மாணவர்களுக்கு ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்துவதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், செயற்கை நுண்ணறிவு (AI), டேட்டா என்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப துறைகள் முதல் எலக்ட்ரீஷியன், டிராஃட்ஸ்மேன் போன்ற தொழிற்துறை பயிற்சிகள் வரை மொத்தம் 40 தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை பாடநெறிகள் வழங்கப்படுகின்றன. ஆறு மாதங்கள் கொண்ட இந்த பாடநெறிகளில் AI–மஷின் லெர்னிங் இன்ஜினியர், ஃபுல்-ஸ்டாக் டெவலப்பர், கிளவுட் சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர், AR/VR டெவலப்பர், பைதான் அடிப்படையிலான பயிற்சிகள் போன்ற அதிக தேவை காணும் டிஜிட்டல் பணி துறைகளும், NCVET அங்கீகாரம் பெற்ற எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர் போன்ற தொழிற்துறை பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அதிகாரிகள் தெரிவிக்கையில், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ப, பொருளாதார ரீதியாக நெருக்கடி அனுபவிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திறன் பெறுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.