Jun 30 220 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்; மீட்புப்பணி தீவிரம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் Published on: 30 Jun 2026, 2:39 pm Updated on: 30 Jun 2026, 2:39 pm Google தினத்தந்தியை கூகுளில் பின்தொடரவும்கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as Preferred Source 🔗 மேலும் படிக்க: தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் எப்படி நடந்தது? இன்று காலை, அந்த சிறுவன் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தாத்தாவுக்கு உணவு கொண்டு சென்றிருந்தான். தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சென்று மண்ணை உள்ளே போட்டுக் கொண்டிருந்தான். அப்போது கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க முயன்றபோது, ஈரமான மண்ணில் கால் வழுக்கியதால் சிறுவன் எதிர்பாராதவிதமாக 220 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தான். முதற்கட்ட மீட்பு முயற்சி இதனையடுத்து சிறுவனின் தந்தை, தாத்தா மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்க முயன்றனர். ஆனால், அது முடியாததால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தீவிர மீட்புப் பணி தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமரும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனை பாதுகாப்பாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. June 30, 2026
Jun 30 இந்திய பாரம்பரியத்தை பிரதிபலித்த மோடியின் பரிசுகள்; செசல்ஸ் தலைவர்களுக்கு சிறப்பு அன்பளிப்பு June 30, 2026
Jun 30 சாலையோரங்களில் கைவிடப்பட்ட 717 வாகனங்கள் பறிமுதல்: உரிமையாளர்களுக்கு 15 நாள் அவகாசம் June 30, 2026
Jun 30 1144 ஹெக்டேர் நில ஒதுக்கீடு நீட்டிப்பு; அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தீவிரம் June 30, 2026
Jun 30 “எனக்கு மட்டும் பதவி வேண்டாம்” – ஆதரவாளர்களுக்காக போர்க்கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி June 30, 2026