சென்னை: வார இறுதி நாட்களில் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால், பலர் முன்பதிவில்லாத பெட்டிகளில் நெரிசலை பொருட்படுத்தாமல் பயணிக்க வேண்டிய நிலை உருவாகிறது. சிலர் அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கவும் நேர்கிறது.
இந்த நிலையில், பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் விவரம்:
நாகர்கோவில் – தாம்பரம்:
நாகர்கோவிலில் இருந்து நாளை இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வரும்.
தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் சேரும்.
திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர்:
திருவனந்தபுரத்தில் இருந்து நாளை பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.20 மணிக்கு எழும்பூரில் சேரும்.
எழும்பூரில் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் சேரும்.
கோவை – சென்னை சென்ட்ரல்:
கோவையில் இருந்து நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் சேரும்.
சென்ட்ரலில் இருந்து திங்கட்கிழமை மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவையில் சேரும்.
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.