12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

(17.01.2026 – சனிக்கிழமை)

இன்று விசுவாவசு வருடம், தை மாதம் 3-ஆம் தேதி. நாள் முழுவதும் சதுர்த்தசி திதி நிலவுகிறது. காலை 9.40 மணி வரை மூலம் நட்சத்திரம், அதன் பின்னர் பூராடம். மரண யோகம் இருப்பதால் தேவையற்ற ஆபத்துகளை தவிர்ப்பது நல்லது. நல்ல நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை, மாலை 4.30 முதல் 5.30 வரை. மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு நிர்வாக முடிவுகளில் தெளிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேருவார்கள். தூரத்து உறவினர்கள் அறிமுகமாவார்கள். புதிய கடை தொடங்கும் முயற்சி மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் சளி தொடர்பான பிரச்சினைகள் சிறிதளவு இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

ரிஷபம்

சந்திராஷ்டமம் காரணமாக இன்று பொறுமை அவசியம். நெருங்கிய உறவினர் மற்றும் தொழில் சார்ந்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல் நலத்தில் பார்வை சம்பந்தமான சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

கடகம்

சொத்து தொடர்பான பிரச்சினைகள் சமரசமாக முடியும். உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அரசுத் துறைகளால் ஆதாயம் உண்டு. முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

சிம்மம்

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். உடல் நலத்தில் தொண்டை புகைச்சல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

வேலைச் சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

அலுவலகத்தில் மனநிம்மதி உண்டாகும். செலவுகள் கூடும். விடாமுயற்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய உறவுகள் மீண்டும் இணையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

தந்தை வழி உறவு மேம்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

பெரும் தொகை பணம் கைக்கு வரும். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்கான அழைப்பு வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

பழைய கருத்து வேறுபாடுகள் விலகும். ஆன்மிக பயணம் அமையும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

உத்யோகத்தில் இருந்த மோதல்கள் தீரும். பாராட்டுகள் கிடைக்கும். உடல் நலக் குறைபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு