பெர்லின்: ஜெர்மனியில் ‘ஜெர்மனிக்கான மாற்று’ (ஏ.எப்.டி.) எனப்படும் தீவிர வலதுசாரி கட்சியின் இளைஞர் பிரிவுக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் முக்கிய எதிர்க்கட்சி வகிப்பில் செயல்படும் ஏ.எப்.டி.-வின் இளைஞர் பிரிவு, முன்னதாக ஜெர்மனி உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் “தீவிரவாதக்குழு” என வகைப்படுத்தியது.
இதற்கு பிறகு அந்த பிரிவு கலைக்கப்பட்டு, புதிய “ஜெர்மன் தலைமுறை” என்ற இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதனை எதிர்த்து, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நேற்று பெர்லினில் பேரணி நடைபெற்றது. முக்கிய நகர பகுதிகளில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையிலான மோதலில் 15 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.