தமிழ் இசை உலகில் தனித்துவமான பாணியுடன் அறிமுகமானவர் Hiphop Tamizha Aadhi. ராப் பாடல்களின் மூலம் இளைஞர்களிடையே பெரிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிய அவர், பின்னர் திரைப்படத் துறையிலும் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக தனது தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

தனியிசை உலகில் தொடங்கிய அவரது பயணம் தற்போது தமிழ் திரையுலகில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. அவரது பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தனது இசை பாணியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திரைப்பட இசையமைப்பாளராக அவர் பணியாற்றிய படங்களில் Thani Oruvan, Ambala, Aranmanai உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த படங்களில் இடம்பெற்ற அவரது பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். Meesaya Murukku திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் Natpe Thunai, Naan Sirithal, Sivakumarin Sabadham, Anbarivu போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், “Kadaisi Ulaga Por” என்ற திரைப்படத்தை அவர் தானே தயாரித்து, இயக்கி, அதில் நடித்ததுடன் இசையமைத்தும் இருந்தார். இதன் மூலம் திரைப்படத் துறையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் இசையமைத்த “டக்கர்” என்ற பாடல் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கவனத்தை பெற்றது.
மேலும், உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்கும் வகையில் “Return of the Dragon” என்ற பெயரில் லண்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இசைக் கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் அவரது சர்வதேச ரசிகர் வட்டாரத்தையும் அதிகரித்தன.
இந்நிலையில் தற்போது அவர் “Certified Self Made” என்ற புதிய ஆல்பம் பாடலை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். இந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதே நேரத்தில், அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த “மீசைய முறுக்கு 2” திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மீண்டும் ஒரு முறை ஹிப் ஹாப் ஆதியின் இசை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.