சென்னை:
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23‑ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4‑ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30‑ந்தேதி தொடங்கியது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் கால அவகாசம் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்பு மனுவை திரும்பப் பெறும் கடைசி நேரம் இன்று பிற்பகல் 3 மணி வரை இருந்தது. இதற்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் அதிகபட்சம் எண்ணிக்கையில் போட்டியிடும் தொகுதிகள் உள்ளபோதிலும், அம்பாசமுத்திரம் தொகுதி மட்டும் குறைந்தபட்ச போட்டியாக உள்ளது. இங்கு வெறும் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். அவர்கள் காங்கிரசின் வி.பி. துரை, அதிமுகவிலிருந்து இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன், தவெக சார்பில் ராஜகோபால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த இசை கண்ணன் ஆகியோர் தாம்.