துபாய்:

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ந்தேதி நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் அரசியல் மற்றும் மத அமைப்பில் மிக முக்கியமான இடத்தை வகித்த காமேனி பல ஆண்டுகளாக நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்துவரும் தலைவராக இருந்தார். அவரது உயிரிழப்பு ஈரான் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.