வீடு, கார் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் குறைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

டெல்லி:
நாட்டின் வணிக வங்கிகள் குறுகிய கால கடனை மத்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெறுகின்றன. அந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கிக்கு செலுத்தப்படும் வட்டியே ‘ரெப்போ வட்டி விகிதம்’ எனப்படும். நாட்டின் பொருளாதார நிலைமைகளைப் பொருத்து இந்த ரெப்போ விகிதத்தை RBI காலக்காலமாக மாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதி நிலை கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 5.50% இருந்த ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளதால், வீட்டு கடன், கார் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களில் வட்டி விகிதத்தையும் வங்கிகள் குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.