சென்னை: எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நான்காவது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 46வது இடத்தில் உள்ள இந்திய வீரர், தமிழகத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார், எகிப்தின் ஆடம் ஹவாவை 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பெண்கள் ஒற்றையர் இறுதியில், உலக தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள டெல்லியைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை அனாஹத் சிங், தமிழகத்தின் 39 வயது ஜோஸ்னா சின்னப்பாவை 11-8, 11-13, 11-13, 11-6, 11-8 என்ற கடினமான செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.