நெல்லை,
திருநெல்வேலி தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்திய தவெகத் தலைவர் விஜய் பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் மகன், அண்ணன், தம்பி, தோழன், நண்பன் விஜய் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் இக்கூட்டம் நடைபெறவில்லை. இப்போது அவர் அதிகாரமில்லா முதலமைச்சராக இருப்பதால் ஈசியாக வர முடிந்தது. நம்மீது அவதூறுகளைப் பரப்பினார்கள். திமுக கூட்டணி, பாஜக கூட்டணி வெளியே தனித்தனி, உள்ளே ஒன்றுதான். இரு கூட்டணிகளுக்கும் ஒரே நோக்கம், விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வரக்கூடாது.
விஜய் வந்ததன் பிறகு அவர்கள் ஊழல் செய்ய முடியவில்லை. அதனால் என்மீது கோபத்தில் உள்ளனர். கல்லாபெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார். கூட்டணிக் கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போடமாட்டார்கள். பாஜக கூட்டணியிலும் இதைவிட பிரச்சினைகள் உள்ளன. நம்மீது கண் வைத்துள்ளனர். காரணம் அவர்கள் வீட்டிலேயே விசில் சத்தம் கேட்கிறது. கோடிகளைக் கொடுத்து தமிழ்நாட்டு காங்கிரஸை திமுக பைக்�ொள போட்டுக்கொண்டது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்மப் பக்கம் நிற்கிறது. சிறுபான்மை மக்களும் நம்மப் பக்கம்.
நான் கட்சி தொடங்க ஒவ்வொரு வீட்டிற்கும் போகவில்லை. வீட்டுக்குள் போய்த்தான் கட்சியைத் தொடங்கினேன். மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு உணர்ச்சி. எனக்கு ஒன்று, மக்களுக்கு ஒன்று, கண்கள் கலங்கும். கரூர் விஷயம் ஊருக்கே தெரியும். என்மீது பழி போடுகிறார்கள். ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். மக்களைச் சந்திக்க தடை விதித்தனர். சுற்றியுள்ளவர்களை வைத்துப் பிரச்சினை செய்தனர். எல்லாம் தோல்வியுற்றது. என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது.
இருநூறு முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர். நம் வேட்பாளர்கள் டாட்டா, பிர்லா இல்லை. நம் வீட்டில் இருந்து வந்தவர்கள். இதுவரை யாருக்கோ ஓட்டு போட்டோம். இப்போது உங்கள் வீட்டுக்காரருக்கு போடுகிறோம். ஒரு காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் தானா. அவர்போல யாரும் வரமாட்டார்களா என ஏங்கிய நேரத்தில் நாம் வந்துள்ளோம். இத்தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கிறோம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் நலமடைவார்கள்.
ஓட்டை வீணாக்காதீர்கள். மக்களிடமிருந்து பைசா ஒன்று எடுக்கமாட்டேன். உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா. நாங்குநேரி போதைக்கு நடந்ததா, ஏன் தடுக்கவில்லை. மணல், மலை திருடுகிறார்கள். ஆட்சி ஊழலில் ஊறி நாறுகிறது. பணத்தால் மக்களை வாங்க முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல். இருபத்தி மூன்றாவது தேதி விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். வலியைத் தாங்கி உங்களுக்காக வந்தவன். டிவிகே, டிஎம்கே இரு முனை போட்டி. ஒரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சித் தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.