இன்றைய தினம் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, மகிழ்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சிலருக்கு சவால்களும் இருக்கலாம். ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய பலன்கள் பின்வருமாறு:
மேஷம்:
உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு உருவாகும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சின்ன மனக்கசப்பு ஏற்பட்டாலும் சமரசம் மூலம் அமைதி நிலைக்கும். ஆன்மிகம் மீது நாட்டம் கூடும். குலதெய்வக் கோயிலில் பணி செய்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
ரிஷபம்:
பணவரவால் மனம் மகிழும் நாள். எதிர்பார்த்த நற்செய்தி வரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் லாபம் தரும். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் அமைதியான அணுகுமுறையால் அதிக ஆர்டர்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.
மிதுனம்:
உத்யோகத்தில் தேங்கியிருந்த பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திருமண யோகம் உண்டு. நீண்டநாள் உடல் நல பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குலதெய்வ கோயில் தரிசனம் அமைதியையும் ஆற்றலையும் தரும்.
கடகம்:
வியாபாரிகள் விற்பனை அதிகரிக்க புதிய யுக்திகளைப் பயன்படுத்துவார்கள். சிலருக்கு காதல் மலரும். பிரபல நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திடீர் பயணங்கள் சாத்தியம். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறப்பாகும்.
சிம்மம்:
சந்திராஷ்டமம் நிலை இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கவும். தொழிலில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். சொற்களில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் அமைதியைப் பேணுங்கள்.
கன்னி:
நீண்டநாள் தாமதமான வேலைகளை இன்று முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் பயனளிக்கும். வேலைக்குச் சலுகைகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளிச்செல்லும் வாய்ப்பு உண்டு. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
துலாம்:
பெண்களுக்கு நல்ல வரன் அமையும். அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் அமைதியை பேணுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.
விருச்சிகம்:
உத்யோகத்தில் பதவி உயர்வு சாத்தியம். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு உருவாகும். கலைஞர்களுக்கு முக்கிய அழைப்புகள் வரும். சமூகத்தில் மரியாதை உயரும். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும்.
தனுசு:
எடுத்துக் கொள்ளும் காரியங்களில் வெற்றி நிச்சயம். குடும்பப் பிரச்சினைகள் தீரும். வணிகத்தில் புதிய தொடர்புகள் உருவாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் மேம்படும்.
மகரம்:
வீட்டில் மாற்றங்கள் செய்யும் நாள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குவியும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர்.
கும்பம்:
தடைப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடங்கும். கலைத்துறையினருக்கு சிறப்பான நாள். வியாபாரத்தில் லாபம் உண்டு. ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வாகன ஓட்டத்தில் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு சாதகமான நாள்.
மீனம்:
தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்களுடன் பேசும் போது எச்சரிக்கை. மனைவியிடம் அன்பும் புரிதலும் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் அமையும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மார்க்கெட்டிங் துறையில் பணம் சேரும்.