இன்றைய ராசிபலன்
மேஷம்:
மேல் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை வழங்குவர். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் அது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்புகள் தீரும். எதிரிகளின் தடைகள் அகலும். வியாபாரம் சிறப்பாக வளரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்:
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு செய்வீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பர். திருமண முயற்சிகளில் இருந்த பெண்களுக்கு நல்ல வரன் ஏற்படலாம். வேலைச்சுமை குறையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மிதுனம்:
சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். ஆன்மிக ஆர்வம் சிறிது குறையலாம். வியாபாரம் நன்றாக செழிக்கும். காதல் உறவில் இனிமை அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்:
பெண்வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல மன ஒருமைப்பாடு ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் அமைதியாக இருப்பது நன்மை தரும். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். சிறிது நேரம் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
சிம்மம்:
சந்திராஷ்டமம் தாக்கம் இருப்பதால் முக்கிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சிறிய விஷயங்களும் பெரும் பிரச்சினையாக மாறக்கூடும். பேசும் போது கவனம் தேவை. பொறுமை காக்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கன்னி:
சமூக மதிப்பு உயரும். கூட்டுத் தொழிலில் லாபம் பெருகும். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை காணப்படும். பெரிய காரியங்கள் விரைவாக நிறைவேறும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்கள் சார்ந்த தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்:
கலைஞர்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணம் பயன் தரும். அரசாங்கப் பணிகளில் அனுகூலம் உண்டு. உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்:
கணவன்–மனைவி உறவில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பங்குச் சந்தை லாபம் தரும். வெளிநாட்டு பயண வாய்ப்பு உண்டு. பழைய கடன்களை தீர்க்க வழி கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு:
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். உறவினர்களின் வீட்டில் மகிழ்ச்சி நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். வியாபாரம் வளர்ச்சி அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மகரம்:
பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். காதலர்கள் தங்கள் பொறுப்பை உணர்வர். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு சிறிய உடல் குறைபாடுகள் ஏற்படலாம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கும்பம்:
பெண்வியாபாரிகளுக்கு வெளியூர் ஆர்டர்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு மீண்டும் மேலோங்கும். பணியிடத்தில் நல்ல ஒத்துழைப்பு இருக்கும். மன அமைதி பெருகும். உடல் நலம் சிறப்பாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மீனம்:
காதல் பிரச்சினைகள் தீரும். கல்வியில் கவனம் அதிகரிக்கும். விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றி தரும். தாய்வழி சொத்து வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை