
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு 100% வரை Tariff விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை அமெரிக்க House of Representatives நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா 262–159 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, தற்போது ட்ரம்பின் ஒப்புதலுக்காக செல்கிறது.
இந்த சட்டம் நேரடியாக இந்தியாவுக்கு 100% tariff விதித்துவிட்டதாக அர்த்தமில்லை. மாறாக, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தியை அதிக அளவில் வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்தியா மற்றும் சீனா முக்கிய ரஷ்ய crude buyers என்பதால் இந்த மசோதா இரு நாடுகளுக்கும் நேரடி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. 1.4 பில்லியன் மக்களின் energy security-ஐ உறுதி செய்வதே இந்தியாவின் முன்னுரிமை என்றும், சந்தை நிலை மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளிலிருந்து எரிசக்தி வாங்குவதை இந்தியா தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய Tariff நடவடிக்கைகள் இந்தியா–அமெரிக்கா பொருளாதார உறவுகளையும், இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் பாதிக்கக்கூடும் என்று இந்தியா எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் இதன் சாத்தியமான விளைவுகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய crude oil suppliers-ல் ஒன்றாக உள்ளது. FY2026-ல் இந்திய crude imports-ல் ரஷ்யாவின் பங்கு சுமார் 30.3% இருந்ததாக மதிப்பீடுகள் கூறுகின்றன. அதனால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை திடீரென குறைப்பது இந்தியாவின் energy cost மற்றும் supply security மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.