இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க T20 International போட்டிக்கான 15 பேர் கொண்ட ஜப்பான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி செப்டம்பர் 22, 2026 அன்று ஜப்பானின் Sano International Cricket Ground-ல் நடைபெற உள்ளது. இது இந்தியா மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகள் மோதும் முதல் T20I போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜப்பான் அணிக்கு Kendel Kadowaki-Fleming கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜப்பானின் T20I வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த முக்கிய வீரர்களில் ஒருவர். அனுபவமிக்க Ibrahim Takahashi, Declan Suzuki-McComb ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், இளம் spin all-rounder Jake Kusuda-Nairn, veteran Tsuyoshi Takada, wicketkeepers Wataru Miyauchi, Alex Shirai-Patmore, spinner Makoto Taniyama உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர். இந்த squad பெரும்பாலும் Asian Games 2026-க்காக தேர்வு செய்யப்பட்ட அணியையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

Japan Squad: Kendel Kadowaki-Fleming (c), Charlie Hara-Hinze, Benjamin Ito-Davis, Alester Kadowaki-Fleming, Kohei Kubota, Jake Kusuda-Nairn, Wataru Miyauchi (wk), Reo Sakurano-Thomas, Alex Shirai-Patmore (wk), Shoma Sugaya-Slater, Declan Suzuki-McComb, Tsuyoshi Takada, Ibrahim Takahashi, Makoto Taniyama, Lachlan Yamamoto-Lake.

இந்தியா தரப்பில் Shreyas Iyer தலைமையிலான வலுவான அணி களமிறங்குகிறது. Jasprit Bumrah, Abhishek Sharma, Sanju Samson, Ishan Kishan, Tilak Varma, Axar Patel, Washington Sundar, Varun Chakravarthy, Arshdeep Singh உள்ளிட்டோர் இந்திய அணியில் உள்ளனர்.