போலந்து தலைநகர் வார்சாவில் சுமார் 30 ரோபோக்கள் பங்கேற்ற வித்தியாசமான போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செப்டம்பர் 7 அன்று Poland-ன் Ministry of Digital Affairs அலுவலகம் முன்பு humanoid robots மற்றும் நான்கு கால்களுடன் இயங்கும் robot dogs ஒன்று திரண்டு, Artificial Intelligence மற்றும் automation-க்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் demonstration நடத்தின.

இந்த போராட்டத்தை Democratism என்ற initiative ஏற்பாடு செய்தது. AI மற்றும் robotisation காரணமாக எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற விவாதத்தை பொதுமக்களிடமும் அரசிடமும் கொண்டு செல்லவே இந்த unusual protest ஏற்பாடு செய்யப்பட்டதாக organisers தெரிவித்தனர்.

ரோபோக்கள் கொடிகளை ஏந்தி சுற்றி நடந்தன. Loudspeakers மூலம்:

“Defend workplaces”
“Time for rules”
“Don’t wait, regulate”

போன்ற slogans ஒலிக்கப்பட்டன.

“Technology already reality”

போராட்டத்தில் பங்கேற்ற Agibot A3 humanoid robot செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தது.

“இந்த technology இப்போது எதிர்காலத்தில் வரப்போகும் ஒன்று அல்ல; ஏற்கனவே reality ஆகிவிட்டது” என்ற கருத்தை organisers முன்வைத்தனர்.

AI மனித வேலைகளை மாற்றுமா?

Organiser Grzegorz Kuliś, humanoid robots physical jobs-ஐ மட்டுமல்லாமல், AI systems cognitive மற்றும் office-related jobs-ஐயும் மாற்றக்கூடிய நிலை உருவாகி வருவதாக கூறினார்.

அதனால் automation வேகமாக வளர்வதற்கு முன்பே employees-ஐ பாதுகாக்கும் regulations உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் நேரில் சந்திப்பு

இந்த robot demonstration நடைபெற்ற இடத்திற்கு Poland Digital Affairs Minister Krzysztof Gawkowski நேரில் வந்து organisers-ஐ சந்தித்தார்.

கட்டுப்பாடில்லாத AI models humanoid robots-ல் பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் பெரிய சவாலாக இருக்கக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொண்டதாக Euronews தெரிவித்துள்ளது.