
வாரணாசியில் இருந்து மும்பை செல்லவிருந்த IndiGo விமானம், கடைசி நேரத்தில் பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சுமார் 3.5 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
IndiGo நிறுவனத்தின் 6E-6544 விமானம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
விமானம் காலை 10.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், அந்த விமானத்தை இயக்கவிருந்த பைலட் திடீரென உடல்நலம் சரியில்லை என்று விமான நிறுவனத்திடம் தெரிவித்ததாக IndiGo தரப்பு கூறியுள்ளது. இதனால் உடனடியாக மாற்று பைலட்டை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து மாற்று பைலட்
வாரணாசி IndiGo நிறுவனத்தின் base station அல்ல என்பதால், உடனடியாக அங்கு replacement pilot கிடைக்கவில்லை.
இதையடுத்து அகமதாபாத்திலிருந்து மாற்று பைலட் வரவழைக்கப்பட்டார். அவர் பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு வாரணாசி வந்தடைந்தார். பின்னர் விமானம் 2.21 மணிக்கு மும்பை நோக்கி புறப்பட்டது.
இதனால் திட்டமிட்ட நேரத்தை விட சுமார் 3 மணி 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
விமானம் பின்னர் மாலை 4.23 மணிக்கு மும்பையை சென்றடைந்தது.
பயணிகள் அதிருப்தி
விமானம் தாமதமான நிலையில், பாதுகாப்புச் சோதனைகளை முடித்து boarding area-வில் காத்திருந்த பயணிகளில் சிலர் சரியான தகவல் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியதாக New Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.
சில பயணிகள் விமான நிலைய terminal பகுதியில் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் Airport Director Puneet Gupta, பயணிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
IndiGo தரப்போ, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தாமதம் குறித்து பயணிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், refreshments வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.