
17 வயது அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை Thea Frodin, தனது முதல் US Open main-draw போட்டியில் விளையாடி உலக டென்னிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Wild card மூலம் US Open வாய்ப்பு பெற்ற Frodin, முதல் சுற்றில் உலக நம்பர் 2 மற்றும் 2026 Australian Open champion Elena Rybakina-வை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த Rybakina, போட்டியை 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.
தோல்வியடைந்தாலும் Frodin தனது சக்திவாய்ந்த serve மூலம் கவனம் பெற்றார். அவர் போட்டியில் 11 aces பதிவு செய்தார். அவரது வேகமான serve 122 mph வரை சென்றதாக WTA தெரிவித்துள்ளது.
Thea Frodin-ன் பின்னணியும் இந்த US Open debut-க்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் வெளியான ‘King Richard’ திரைப்படத்தில் இளம் Serena Williams-க்கு tennis body double ஆக அவர் பணியாற்றியிருந்தார். அப்போது Frodin-க்கு 12 வயது மட்டுமே.
USTA Girls’ 18s National Championships பட்டத்தை வென்றதன் மூலம் இந்த ஆண்டு US Open wildcard வாய்ப்பை அவர் பெற்றார். தனது முதல் tour-level main draw போட்டியிலேயே முன்னணி வீராங்கனையை எதிர்கொண்டது மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாக Frodin தெரிவித்துள்ளார்.
US Open main draw பயணம் முடிந்தாலும், Frodin அடுத்ததாக US Open Junior Championships-ல் விளையாட உள்ளார். மேலும் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பிறகு professional tennis-க்கு செல்வதா அல்லது college tennis தேர்வு செய்வதா என்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.