
அசாம் மாநிலம் குவஹாத்தி Hatigaon/Basisthapur பகுதியில் 25 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரியா தாலுக்தார் கோஸ்வாமி (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 6 அன்று வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தம்பதியரை இரண்டு நாட்களாக காணவில்லை என்றும், அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் வீட்டை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது ரியாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்டிருந்ததுடன், விரல்களும் வெட்டப்பட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டை சோதனை செய்தபோது, துண்டிக்கப்பட்ட தலை பிளாஸ்டிக் பையில் வைத்து refrigerator-ல் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரியாவின் கணவர் ராமானுஜன் கோஸ்வாமி முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். அவர் பின்னர் Hatigaon Police Station-ல் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக முழு விவரங்களை வெளியிடவில்லை. சம்பவத்தின் பின்னணி, தம்பதியருக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா, வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.