இந்தியாவின் சமீபத்திய 7.8% GDP வளர்ச்சி குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக பதிலளித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற Shri Ram College of Commerce (SRCC) நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இந்தியா 2013-ல் உயர்ந்த பணவீக்கம், மந்தமான வளர்ச்சி மற்றும் பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாக கூறினார். அப்போது இந்தியா “Fragile Five” பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

தற்போது இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதாக கூறிய பிரதமர், “7.8% வளர்ச்சி சிலரால் ஜீரணிக்க முடியவில்லை” என்ற பொருளில் எதிர்க்கட்சிகளையும் விமர்சகர்களையும் சாடினார்.

அதே நேரத்தில், GDP தரவுகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். Reuters report படி, முன்னாள் நிதித்துறை அதிகாரி Subhash Chandra Garg மற்றும் முன்னாள் RBI ஆளுநர் Raghuram Rajan போன்றோர், புதிய GDP கணக்கீட்டு முறை, base effect, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டு நிலை ஆகியவற்றின் பின்னணியில் இந்த வளர்ச்சி எண்ணிக்கையை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதனால், 7.8% GDP growth ஒரு வலுவான பொருளாதார signal-ஆ, அல்லது methodology காரணமாக அதிகமாகத் தோன்றுகிறதா? என்ற விவாதம் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.