
மும்பையின் Bandra-Kurla Complex (BKC) பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த Global Fintech Fest நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு, போலி Prime Minister’s Office (PMO) அடையாள அட்டையை பயன்படுத்தி Jio World Plaza-க்குள் நுழைந்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் Rohan Premal Parikh (24) மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாவலராக இருந்த முன்னாள் ராணுவ வீரர் Dilip Kunde என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் வந்த மூன்றாவது நபர் Prathamesh Bagul தப்பிச் சென்ற நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோதனையின்போது Dilip Kunde-விடம் உரிமம் பெற்ற revolver மற்றும் 6 live cartridges இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. Rohan Parikh காட்டியதாக கூறப்படும் PMO அடையாள அட்டையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து security personnel போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
CCTV காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் கண்டு இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களை செப்டம்பர் 11 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கு தற்போது Mumbai Crime Branch-ன் Crime Intelligence Unit விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த சம்பவம் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும், PM நிகழ்ச்சியுடன் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்படவில்லை என்றும் மும்பை போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.