உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் மேல்பகுதிகளில் இருந்து வரும் அதிக நீர்வரத்து காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் warning mark-ஐ கடந்துள்ளது.

இதனால் கங்கை கரையோர ghats-ன் நடைபாதைகள் மற்றும் சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கங்கை நதியில் படகு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, Varanasi மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு குறையும் வகையில் நிவாரண மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களிலும் கங்கை மற்றும் யமுனை உள்ளிட்ட நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெள்ள எச்சரிக்கை நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.