
இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று வலுவான உயர்வை பதிவு செய்து, சுமார் இரண்டு மாதங்களில் இல்லாத உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தக தொடக்கத்தில் ரூபாய் ஒரு டாலருக்கு ₹94.30 என்ற அளவில் தொடங்கியது. இது ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பதிவான சிறந்த நிலையாகும். புதன்கிழமை ரூபாய் ₹94.97 என்ற நிலையில் முடிவடைந்திருந்தது.
ரூபாய் வலுப்பெறுவதற்கு முக்கிய காரணமாக இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு நிதி வரவு பார்க்கப்படுகிறது. RBI தகவலின்படி, ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு foreign-currency mobilisation நடவடிக்கைகள் மூலம் இந்தியாவுக்கு $136.4 பில்லியன் அளவுக்கு நிதி வந்துள்ளது. இதில் பெரும்பகுதி NRI deposits மூலம் வந்துள்ளது.
இந்த நிதி வரவு இந்தியாவின் foreign exchange reserves-ஐ மேலும் வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் forex reserves ஏற்கனவே record $729.3 billion அளவை எட்டியுள்ளதால், currency volatility-ஐ கட்டுப்படுத்த RBI-க்கு கூடுதல் திறன் கிடைத்துள்ளது.
இந்த வாரத்தில் ரூபாய் 1%-க்கும் மேல் உயர்ந்து, ஆசியாவின் சிறப்பாக செயல்படும் currencies-ல் ஒன்றாக மாறியுள்ளது.
இருப்பினும், சர்வதேச crude oil விலை உயர்வு மற்றும் அமெரிக்க Federal Reserve வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரூபாய்க்கு தொடர்ந்து risk factors ஆக உள்ளன. Brent crude இந்த வாரத்தில் சுமார் 7% உயர்ந்துள்ளதாக Reuters தெரிவித்துள்ளது