ஜெர்மனியின் முன்னணி வாகன உற்பத்தியாளர் Volkswagen Group, தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய restructuring திட்டத்தை அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் supervisory board, மேலும் 50,000 பணியிடங்களை குறைக்கும் Future Plan 2030 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பே சுமார் 50,000 வேலைகள் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததால், மொத்தத்தில் 2030க்குள் சுமார் 100,000 jobs குறைக்கப்படும்.

Volkswagen Group தற்போது உலகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. எனவே 1 லட்சம் job cuts என்பது அதன் workforce-ன் சுமார் 15% அளவுக்கு சமம்.

இந்த restructuring-ன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் car model lineup-ஐ பாதியாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் ஜெர்மனியில் உள்ள Emden, Zwickau, Hanover, Neckarsulm ஆகிய 4 ஆலைகளின் எதிர்காலமும் மறுபரிசீலனையில் உள்ளது. 2031க்கு பிறகு இங்கு தற்போதைய vehicle production தொடருமா என்பது உறுதி இல்லை.

Volkswagen இந்த கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக சீன வாகன உற்பத்தியாளர்களின் கடும் போட்டி, சீனாவில் விற்பனை குறைவு, ஐரோப்பாவில் excess production capacity மற்றும் அமெரிக்க import tariffs ஆகியவை நிறுவனத்தின் profitability-ஐ பாதித்துள்ளன.

2026 முதல் பாதியில் Volkswagen-ன் after-tax earnings சுமார் 30% சரிந்ததாக reports தெரிவிக்கின்றன. இதனால் operating costs குறைத்து, நிறுவனத்தை மீண்டும் போட்டித்திறன் கொண்டதாக மாற்றவே Future Plan 2030 முன்னெடுக்கப்படுகிறது.