இந்தியாவின் மெட்ரோ ரயில் வலையமைப்பு அதிவேகமாக விரிவடைந்து வரும் நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவை முந்தி உலகின் இரண்டாவது பெரிய Metro network ஆக இந்தியா உருவாகலாம் என்று மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோஹர் லால் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் செயல்பாட்டிலுள்ள மெட்ரோ வலையமைப்பு சுமார் 1,170 கி.மீ. ஆக உள்ளது. அமெரிக்காவின் Metro rail network சுமார் 1,386 கி.மீ. என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான வித்தியாசம் சுமார் 216 கி.மீ. மட்டுமே.

2026 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் 26 நகரங்களில் 1,155 கி.மீ. Metro network செயல்பாட்டில் இருந்ததாக மத்திய அரசின் PIB தகவல் தெரிவிக்கிறது. 2014-ல் 5 நகரங்களில் வெறும் 248 கி.மீ. மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் Metro கட்டமைப்பு பல மடங்கு விரிவடைந்துள்ளது.

இந்த வேகத்தில் புதிய Metro corridors திறக்கப்பட்டால், இந்தியா அமெரிக்காவை முந்தி சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2-வது பெரிய Metro rail network கொண்ட நாடாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. சீனா தற்போது மிகப்பெரிய Metro network கொண்ட நாடாக உள்ளது.