தமிழக காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 10,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவர் என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

காவல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இந்த புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை மேம்படுத்துதல், காவல் நிலையங்களில் உள்ள பணிச்சுமையை குறைத்தல், குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆட்சேர்ப்பின் கீழ் எந்தெந்த காவல் பிரிவுகளில் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படும், தேர்வு முறை, வயது வரம்பு மற்றும் recruitment notification எப்போது வெளியாகும் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் தனியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையில் நீண்டகாலமாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில், 10,000 காவலர்கள் நியமனம் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களிடையே கவனம் பெற்றுள்ளது.