
சமூக வலைதளங்களில் ‘National Crush’ என்று பிரபலமான Major Rishabh Singh Sambyal, சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றிய இந்திய ராணுவத்திலிருந்து premature retirement பெற்றுள்ளார்.
President Droupadi Murmu-வின் Aide-de-Camp ஆக பணியாற்றிய காலத்தில், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் அவருடன் தொடர்ந்து காணப்பட்ட Rishabh Sambyal சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றார்.
அவரது திடீர் ஓய்வை தொடர்ந்து, “வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்யவே அவர் Army-ஐ விட்டு வெளியேறினார்” என்பது உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவின.
இதற்கு விளக்கம் அளித்த Rishabh Sambyal, தனது முடிவு திருமணத்துடன் தொடர்புடையது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். குடும்பப் பொறுப்புகள் மற்றும் சில தனிப்பட்ட சூழ்நிலைகளே இந்த கடினமான முடிவை எடுக்க வைத்ததாக அவர் தெரிவித்ததாக reports கூறுகின்றன.
மேலும், தற்போது தான் single என்றும் உடனடியாக திருமணம் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் விளக்கமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராணுவ உடையை இவ்வளவு விரைவாக கழற்ற வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், இது தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.