
மத்திய பிரதேசத்தின் Rewa மாவட்டத்தில் உள்ள Sanjay Gandhi Memorial Hospital-ல் 25 வயது கர்ப்பிணி Kalpana Mishra மற்றும் அவரது புதிதாக பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Kalpana ஆகஸ்ட் 25 இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 26 இரவு சுமார் 8.30 மணிக்கு C-section மூலம் குழந்தை பிறந்தது. பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், Kalpana மற்றும் newborn இருவரும் உயிரிழந்தனர்.
மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு Kalpana தனது குடும்பத்தினரிடம் தன்னை காப்பாற்றுமாறு கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேவையான நேரத்தில் மருத்துவர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்று அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த மருத்துவ அலட்சிய குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மருத்துவமனை தரப்பில், Kalpana கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு antenatal check-up மேற்கொள்ளவில்லை என்றும், அவரது blood pressure மற்றும் heart rate திடீரென அதிகரித்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு nursing officers ஏற்கனவே suspend செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், குடும்பத்தினருடன் நடந்த உரையாடலில் hospital superintendent Dr Rahul Mishra கூறியதாக பரவிய சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச அரசு அவரை superintendent பதவியில் இருந்து நீக்கி, அந்த பொறுப்பை Dr Priyank Sharma-விடம் ஒப்படைத்துள்ளது.
இந்த மரணங்களுக்கு மருத்துவ அலட்சியம் காரணமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. விசாரணைக் குழுவின் முடிவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.