கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று, செப்டம்பர் 4, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

மேலும், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும், எந்த சூழ்நிலையிலும் கடமையை தவறாமல் செய்ய வேண்டும், தர்மத்தின் பாதையில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.