சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் கட்டுக்கட்டாக வெளியிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே முதல் கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய முகங்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கவும் இந்த பட்டியல் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், சில பழைய எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.


📋 வேட்பாளர் பட்டியல் 

🔹 (1–25)

  1. கும்மிடிபூண்டி – வி. சுதாகர்
  2. பொன்னேரி – சிறுனியம் பலராமன்
  3. திருத்தணி – கோ. அரி
  4. திருவள்ளூர் – பி.வி. ரமணா
  5. மாதவரம் – வி. மூர்த்தி
  6. திருவொற்றியூர் – குப்பன்
  7. ஸ்ரீபெரும்புதூர் – பழனி
  8. தாம்பரம் – இராசேந்திரன்
  9. செங்கல்பட்டு – கஜேந்திரன்
  10. செய்யூர் – ராஜசேகர்
  11. மதுராந்தகம் – மரகதம் குமரவேல்
  12. காஞ்சிபுரம் – சோமசுந்தரம்
  13. அரக்கோணம் – ரவி
  14. காட்பாடி – ராமு
  15. ஆற்காடு – சுகுமார்
  16. வேலூர் – அப்பு
  17. அணைக்கட்டு – வேலழகன்
  18. குடியாத்தம் – பரிதா புருஷோத்தமன்
  19. வாணியம்பாடி – செந்தில்குமார்
  20. ஆம்பூர் – வெங்கடேசன்
  21. ஊத்தங்கரை – தமிழ்செல்வம்
  22. பர்கூர் – கோவிந்தராசன்
  23. கிருஷ்ணகிரி – அசோக்குமார்
  24. ஓசூர் – பாலகிருஷ்ண ரெட்டி
  25. பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல்

🔹 (26–60)

  1. அரூர் – சம்பத்தஞமார்
  2. செங்கம் – வேலு
  3. கீழ்பென்னாத்தூர் – இராமச்சந்திரன்
  4. ஆரணி – ஜெயசுதா
  5. செய்யார் – சுப்பிரமணியன்
  6. வந்தவாசி – ராணி
  7. திண்டிவனம் – அர்ஜூனன்
  8. வானூர் – முருகன்
  9. விழுப்புரம் – விஜயா
  10. திருக்கோயிலூர் – பழனிசாமி
  11. உளுந்தூர்ப்பேட்டை – குமரகுரு
  12. சங்கராபுரம் – ராகேஷ்
  13. கள்ளக்குறிச்சி – ராஜீவ்காந்தி
  14. கங்கவல்லி – நல்லதம்பி
  15. ஆத்தூர் – ஜெயசங்கரன்
  16. ஏற்காடு – உஷாராணி
  17. ஓமலூர் – மணி
  18. மேட்டூர் – வெங்கடாஜலம்
  19. சங்ககிரி – வெற்றிவேல்
  20. சேலம் தெற்கு – வினோத்
  21. வீரபாண்டி – பாலாஜி சுகுமார்
  22. சேந்தமங்கலம் – சந்திரசேகரன்
  23. நாமக்கல் – ஸ்ரீதேவி மோகன்
  24. பரமத்தி வேலூர் – சேகர்
  25. திருச்செங்கோடு – சந்திரசேகர்

🔹 (61–100)

  1. ஈரோடு கிழக்கு – மனோகரன்
  2. தாராபுரம் – சத்தியபாமா
  3. காங்கயம் – நடராஜ்
  4. பெருந்துறை – ஜெயக்குமார்
  5. அந்தியூர் – ஹரிபாஸ்கர்
  6. கோபிச்செட்டிப்பாளையம் – பிரபு
  7. பவானிசாகர் – பண்ணாரி
  8. கூடலூர் – ஜெய்சீலன்
  9. குன்னூர் – ராமு
  10. மேட்டுப்பாளையம் – சின்னராஜ்
  11. திருப்பூர் வடக்கு – ஆனந்தன்
  12. பல்லடம் – பரமசிவம்
  13. சூலூர் – கந்தசாமி
  14. கவுண்டம்பாளையம் – அருண்குமார்
  15. கோவை தெற்கு – அர்ச்சணன்
  16. சிங்காநல்லூர் – ஜெயராம்
  17. கிணத்துக்கடவு – தாமோதரன்
  18. பொள்ளாச்சி – ஜெயராமன்
  19. வால்பாறை – லட்சுமண சிங்
  20. உடுமலைப்பேட்டை – ராதாகிருஷ்ணன்
  21. பழனி – ரவி மனோகரன்
  22. ஆத்தூர் – விஸ்வநாதன்
  23. நிலக்கோட்டை – தேன்மொழி
  24. வேடசந்தூர் – பரமசிவம்
  25. அரவக்குறிச்சி – செல்வக்குமார்
  26. கிருஷ்ணராயபுரம் – திவ்யா
  27. குளித்தலை – கருணாகரன்
  28. மணப்பாறை – விஜயகுமார்
  29. ஸ்ரீரங்கம் – மனோகரன்
  30. திருச்சி – ராஜசேகரன்

🔹 (101–127)

  1. திருவெரும்பூர் – குமார்
  2. லால்குடி – லீமா ரோஸ்
  3. முசிறி – யோகநாதன்
  4. துறையூர் – சரோஜா
  5. பெரம்பலூர் – தமிழ்செல்வன்
  6. நெய்வேலி – ராஜேந்திரன்
  7. பண்ருட்டி – மோகன்
  8. கடலூர் – சம்பத்
  9. குறிஞ்சிப்பாடி – புவனேந்திரன்
  10. புவனகிரி – அருண்மொழி
  11. சிதம்பரம் – பாண்டியன்
  12. சீர்காழி – சக்தி
  13. பூம்புகார் – பவுன்ராஜ்
  14. நாகப்பட்டினம் – கதிரவன்
  15. திருத்துறைப்பூண்டி – பாலதண்டாயுதம்
  16. திருவிடைமருதூர் – இளமதி
  17. பாபநாசம் – சண்முகபிரபு
  18. ஓரத்தநாடு – சேகர்
  19. பட்டுக்கோட்டை – சேகர்
  20. பேராவூரணி – இளங்கோ
  21. திருமயம் – வைரமுத்து
  22. சிவகங்கை – செந்தில்நாதன்
  23. மேலூர் – பெரியபுள்ளான்
  24. மதுரை கிழக்கு – மகேந்திரன்
  25. சோழவந்தான் – மாணிக்கம்
  26. மதுரை வடக்கு – சரவணன்
  27. உசிலம்பட்டி – மகேந்திரன்
  28. ஆண்டிபட்டி – லோகிராஜன்
  29. போடிநாயக்கனூர் – நாராயணசாமி
  30. கம்பம் – ஜக்கையன்
  31. ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா
  32. விருதுநகர் – கணேசன்
  33. அருப்புக்கோட்டை – சேதுபதி
  34. பரமக்குடி – முத்தையா
  35. திருவாடானை – கீர்த்திகா
  36. முதுகுளத்தூர் – பாண்டி
  37. விளாத்திக்குளம் – சத்யா
  38. தூத்துக்குடி – செல்லப்பாண்டியன்
  39. ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன்
  40. சங்கரன்கோவில் – திலிபன்
  41. கடையநல்லூர் – கிருஷ்ணமூர்த்தி
  42. தென்காசி – செல்வமோகன்
  43. ஆலங்குளம் – பிரபாகரன்
  44. திருநெல்வேலி – கணேசராஜா
  45. அம்பாசமுத்திரம் – சுப்பையா
  46. பாளையங்கோட்டை – சையது சுல்தான்
  47. கன்னியாகுமரி – தளவாய்சுந்தரம்