வாலாஜாபேட்டையில் லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர், தன் அரியர் பணத்தை பெற நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அந்த பணத்தை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு நகராட்சி காசாளர் கேட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஓய்வு பெற்ற பணியாளர் உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தனர். நேற்று மாலை, ஓய்வு பெற்ற பணியாளர் போலி ரூபாய் நோட்டுகளை காசாளரிடம் கொடுத்தார். அந்த ரூ.5 ஆயிரம் பணத்தை காசாளர் பெற்றவுடன், பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து, லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.