சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை: Seeman உருக்கமான பேச்சு
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வரும் சூழலில், Naam Tamilar Katchi 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Seeman தொடர்ந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சீமான் இன்று வெளியிட்ட வீடியோவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக கருத்துகளை பகிர்ந்துள்ளார். பெண்களுக்கு சரிபாதி உரிமை வழங்குவது பெருமை அல்ல, அது பிறவிக்கடமை எனக் குறிப்பிட்ட அவர், பெண்கள் சமூகத்தின் அடித்தளம் என்றும் கூறினார்.
மேலும், பிற மொழி பேசும் மக்களை எதிரிகளாகக் கருதி எந்த இன விடுதலையும் பெற முடியாது என்பதால், அனைவரையும் இணைத்துக் கொண்டு அரசியல் பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார். தமிழ்மொழி சிதைந்து வருகிறது, நீர்வளம் மற்றும் நிலவளம் குறைந்து வருகிறது, காற்று மற்றும் உணவு நச்சாகி வருகிறது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்த நிலை மாற வேண்டுமெனில், மாற்றத்திற்கான ஒரே வழி மக்கள் கையில் உள்ள வாக்குரிமை தான் என்றும், வெற்றிக்கு ஒரே பாதை கடுமையான உழைப்பு மட்டுமே என்றும் சீமான் வலியுறுத்தினார்.
அவரது உரையின் இறுதியில், “நாம் சாதாரணமானவர்கள்… சாகலாம், தோற்கலாம். ஆனால் சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை. சத்தியம் வெற்றி பெறும். சத்தியத்தின் பக்கம் நிற்கும் மக்கள் ஒருநாள் வெல்வார்கள்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
சீமானின் இந்த வீடியோ, தேர்தல் சூழலில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.