கோவை மக்களை கடந்த 5 ஆண்டுகளாக DMK அரசு வஞ்சித்து வருவதாக, தமிழக முன்னாள் பாஜக தலைவர் K. Annamalai குற்றம்சாட்டியுள்ளார்.
தனது எக்ஸ் (X) தள பதிவில் அவர் கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் AIADMK வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கோவை மாவட்ட வளர்ச்சியை முடக்கி, கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. கொரோனா தடுப்பூசி விநியோகம் முதல் தொழில்துறை வளர்ச்சி வரை ஒவ்வொரு துறையிலும் கோவை மாநகரம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டது. கோவைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், கோவை மாநகரத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, தொழில்துறையை மீட்டெடுத்து வளமான கோவையாக மாற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி எடுத்துள்ளதாகவும், அதனால் வரும் ஏப்ரல் 23 தேர்தலில் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 2 நாட்களில் தெரிந்த வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்ட வேண்டும் என்றும், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.பி. வேலுமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வரலாற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறுதியாக, “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்… கோவை மாநகரம் வளரட்டும்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.