லண்டன்: ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், எலான் மஸ்கின் எக்ஸ் வலைத்தளம் அந்த விதிகளுக்கு இணங்கவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையம் விசாரணை நடத்தியது.
விதிகளை பின்பற்ற மறுத்ததால், எக்ஸ் வலைத்தளத்திற்கு 120 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள், ஏமாற்றும் வடிவமைப்புகள், ஆய்வாளர்களுக்கு தேவையான தரவுகளை வழங்க மறுத்தது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.