காபுல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆதரவு அளிக்கின்றன என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் காரணமாக, பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இருநாட்டு மோதல் தீவிரமடைந்து வருகிறது.

சமீபத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படையினர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஆப்கானியர்கள் நால்வர் உயிரிழந்தனர்.

அதேவேளை, இந்த பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.