அரசியல் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தாம் கடந்த காலத்தில் எடுத்த ஒரு முக்கியமான அரசியல் முடிவை மிகப்பெரிய தவறாக ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என அவர் வெளிப்படையாக கூறினார்.

அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால், அப்போது இருந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த தவறான முடிவுக்காக பொதுமக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் உணர்ச்சிகரமாக கூறினார்.
மேலும், அதிமுக கட்சியின் வலுவான கோட்டைகள் பல இடங்களில் பலவீனமடைந்து விட்டதாகவும், கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியை முன்னேற்ற முடியாது என்றும், அவர் தலைமையில் எந்த மாற்றமும் நிகழாது என்றும் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு அவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.