
முதலிடத்தை மீண்டும் பிடித்த கவுதம் அதானி
M3M Hurun India Rich List 2026 பட்டியலில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளனர். அதானி குடும்பத்தின் மொத்த wealth ₹9.23 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அவர்களின் செல்வம் சுமார் 13% உயர்ந்துள்ளதாக Hurun தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை அதானி குடும்பம் முந்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில் முகேஷ் அம்பானி
Reliance Industries தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ₹8.63 லட்சம் கோடி wealth-உடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அம்பானி குடும்பத்தின் wealth சுமார் 10% குறைந்துள்ளதாக Hurun பட்டியல் தெரிவிக்கிறது. அதானி மற்றும் அம்பானி குடும்பங்களுக்கிடையேயான wealth difference சுமார் ₹59,400 கோடி.
இந்தியாவின் Top 10 பணக்காரர்கள்
M3M Hurun India Rich List 2026 படி:
- கவுதம் அதானி & குடும்பம் — ₹9,22,800 கோடி
- முகேஷ் அம்பானி & குடும்பம் — ₹8,63,400 கோடி
- எல்.என். மிட்டல் & குடும்பம் — ₹3,39,300 கோடி
- சைரஸ் பூனாவாலா & குடும்பம் — ₹3,03,400 கோடி
- ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா & குடும்பம் — ₹2,78,500 கோடி
- குமார் மங்கலம் பிர்லா & குடும்பம் — ₹2,68,700 கோடி
- திலிப் ஷாங்வி — ₹2,64,600 கோடி
- அசீம் பிரேம்ஜி & குடும்பம் — ₹2,62,800 கோடி
- அனில் அகர்வால் & குடும்பம் — ₹2,08,300 கோடி
- சமீர் மேத்தா & குடும்பம் — ₹1,89,400 கோடி.
மூன்றாவது இடத்தில் எல்.என். மிட்டல்
ArcelorMittal-ஐச் சேர்ந்த எல்.என். மிட்டல் மற்றும் அவரது குடும்பம் ₹3.39 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். Serum Institute of India-வின் சைரஸ் பூனாவாலா குடும்பம் ₹3.03 லட்சம் கோடியுடன் நான்காவது இடத்திலும், HCL Technologies-ஐச் சேர்ந்த ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா குடும்பம் ₹2.78 லட்சம் கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
391 Dollar Billionaires — புதிய சாதனை
2026 Hurun India Rich List-ல் இந்தியாவின் dollar billionaires எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ₹1,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட wealth கொண்ட 1,810 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் பெரிய அளவிலான wealth creation தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த பட்டியல் காட்டுகிறது.
AI துறையும் முதல் முறையாக தனி பிரிவு
2026 பட்டியலின் முக்கிய அம்சங்களில் ஒன்று Artificial Intelligence தனி wealth sector ஆக முதல் முறையாக இடம்பெற்றிருப்பது. AI துறையில் இருந்து 19 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்; அவர்களின் மொத்த wealth ₹3.07 லட்சம் கோடி. இதில் 15 பேர் இந்த ஆண்டு புதிதாக பட்டியலில் சேர்ந்தவர்கள்.
Real-time பட்டியல் ஏன் வேறுபடுகிறது?
Hurun Rich List ஒரு குறிப்பிட்ட valuation date மற்றும் தனிப்பட்ட methodology அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதனால் Forbes அல்லது real-time billionaire trackers-ல் அதே நாளில் rank வேறுபடலாம். உதாரணமாக செப்டம்பர் 24 real-time data-வில் Mukesh Ambani முதலிடத்தில் காணப்பட்டாலும், M3M Hurun India Rich List 2026-ல் Gautam Adani முதலிடத்தில் உள்ளார்.
— அரசு பார்வை செய்திப் பிரிவு