இன்றைய ராசிபலன் – 13 டிசம்பர் 2025 (சனிக்கிழமை)

இன்றைய பஞ்சாங்கப்படி, விசுவாவசு வருடம், கார்த்திகை மாதம் 27ஆம் நாள். இன்று காலை 10.30 வரை உத்திரம் நட்சத்திரமும் அதன் பின் அஸ்தம் நட்சத்திரமும் அமையும். இரவு 8.49 வரை நவமி திதி நீடித்து பின்னர் தசமி தொடங்கும். மரண யோகம் நிலவும் நாள் என்பதால் முக்கிய செயல்களில் சற்று கவனம் அவசியம். காலை 7.45–8.45 மற்றும் மாலை 4.45–5.45 ஆகிய நேரங்கள் நல்ல நேரமாகும். ராகு காலம் காலை 9.00–10.30; எமகண்டம் மாலை 1.30–3.00; குளிகை காலை 6.00–7.30. கௌரி நல்ல நேரம் காலை 10.45–11.45 மற்றும் இரவு 9.30–10.30. சூலம் கிழக்கு திசை. அவிட்டம், சதயம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

 

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்

மேஷம்

பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும் நாள். பிள்ளைகள் சொல்படி நடந்து மகிழ்ச்சி தருவர். எதிரிகள் விலகி அமைதி நிலவும். உடன்பிறந்தோருடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறி மனநிறைவு கிடைக்கும். உடல் நலம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். புதிய நபர்கள் நட்பாக மாறுவர். பணவரவு அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலைகள் எளிதாக முடியும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

எதிரான வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்களுடன் மீண்டும் நெருக்கம் ஏற்படும். அக்கம் பக்கத்தவர்களின் அன்பு கிடைக்கும். மாணவர்களின் பதற்றம் குறையும். பணப்பொறுப்புகளில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நாள். விவசாயிகளுக்கு லாபம் அதிகம். வரவு–செலவில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

சிம்மம்

தாய்வழி உறவினரின் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. நண்பர்களின் அன்பு அதிகரிக்கும். உடல் நலத்தில் சற்று கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

பயணங்களில் உடைமைகளை கவனமாக கையாளவும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். கூட்டாளிகளுடன் சிறிய மனக்கசப்புகள் ஏற்படலாம். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

வியாபாரத்தில் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினைகள் இல்லை. ஆனால் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சமூக நல ஆர்வலர்களுக்கு பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

தம்பதிகளின் மனஸ்தாபம் நீங்கும். புதிய சொத்துக்கள் சேரும். பழைய பாக்கிகள் கைக்கு வரும். தொழிலில் புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆவணங்களை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

சந்திராஷ்டமம் காரணமாக மனக்குழப்பம் ஏற்படலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை இன்று தொடங்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

தொழிலில் இருந்த தேக்கம் குறையும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் அதிகம். கடன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

குடும்பத்தில் அமைதி நிலவும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திடீர் செலவுகள் ஏற்படலாம். மாணவர்கள் பெருமை சேர்ப்பர். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்