கொடைக்கானலில் 20 அடி பள்ளத்தில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், குடியிருப்புப் பகுதியில் உள்ள 20 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்த காட்டுமாட்டை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த மீட்புப் பணி பல மணி நேரம் நீடித்தது.
சுமார் 10 வயதுடைய காட்டுமாடு பள்ளத்தில் விழுந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காட்டுமாடு பள்ளத்திலிருந்து மேலே வருவதற்காக, மண் அள்ளும் இயந்திரம் மூலம் சரிவுப் பாதை அமைக்கப்பட்டது. பல மணி நேர முயற்சிக்குப் பிறகு காட்டுமாடு உயிருடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
— அரசுபார்வை செய்திகள்