மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென்காசி:
வடகிழக்கு பருவமழை தாக்கம் தொடரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.