மதுரோ-மனைவி சாய்பாபா தீவிர பக்தர்கள்: 2005 புட்டபர்த்தி சந்திப்பு புகைப்படம் வெளியானது; அமெரிக்க கைது பரபரப்பு
காரகாஸ், ஜனவரி 5: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா புளோரஸ் சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்கள் என பரபரப்பு தகவல் வெளியானது. 2005-ல் புட்டபர்த்தி ஆசிரமத்தில் பாபாவைச் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அவர்களைக் கைது செய்து நாடு கடத்திய சம்பவத்திற்குப் பின் இந்தத் தகவல் வெளிப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் செய்திகளிலிருந்து மறைந்த மதுரோ, சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காகவே விலகியதாகத் தெரிகிறது.
டிரம்ப் “போதைப்பொருள் பயங்கரவாதி” எனக் குற்றம்சாட்டிய நிலையில், மதுரோ-புளோரஸ் ஜோடி அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு, நியூயார்க்கில் வழக்கு பதிவு. “அமெரிக்க நீதியைப் பெறுவார்கள்” என அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி உறுதி. வெனிசுலாவில் எண்ணெய் வளங்களை இலக்காக அமெரிக்கா செயல்பட்டதாக உலகநாடுகள் விமர்சம். ரஷியா, ஈரான் கண்டனம் தெரிவித்து, இந்தியா “வெனிசுலா மக்கள் நலனுக்கு ஆதரவு” என அறிக்கை.
கத்தோலிக்கரான மதுரோவை புளோரஸ் சாய்பாபாவிடம் அறிமுகப்படுத்தினார். 2005 திருமணத்துக்கு முன் புட்டபர்த்தியில் பாபாவைச் சந்தித்தனர். ஆட்சிக்கு வந்த மதுரோ, அரண்மனையில் சாய்பாபா படத்தை வைத்தார். 2011 பாபா மறைவுக்கு வெளியுறவு மந்திரியாக இருந்த அவர், தேசிய துக்கநாள் அறிவித்தார். 2024 தேசிய தினத்தின் அழைப்பிதழ்களில் ‘ஓம்’ சின்னம்.
சாய் அமைப்பு மதுரோ ஆட்சியில் தொடர்ந்து செயல்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டும், இந்திய ஆசிரம நடவடிக்கைகள் அப்போதும் இப்போதும் தொடர்கின்றன. இந்நிலையில் அமெரிக்க கைது, சர்வதேச அரசியலை சூடாக்கியுள்ளது.