ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக புதின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் புதின் கலந்து கொண்டார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினர். இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் ரஷியா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரண்டு நாள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின், நேற்று இரவு ரஷியாவுக்கு புறப்பட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமான நிலையத்தில் நேரில் சென்று அவரை வழியனுப்பினார்.