அம்பேத்கர் 70வது நினைவு தினம் – பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி,
சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் அம்பேத்கரை நினைவு கூர்ந்துள்ளார். அதில், “மகா பரிநிர்வாண் தினமான இன்று டாக்டர் அம்பேத்கரை நினைவு கொள்வோம். அவரின் தொலைநோக்குத் தலைமைத்துவம், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடு நமது தேசிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன. நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்” என தெரிவித்துள்ளார்.