கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை திறப்பு – உலகிலேயே உயரமான வெண்கலச் சிலை பெருமை
பனாஜி: கோவா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள கனகோனாவின் பர்தகல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில் உலகிலேயே உயரமான ராமர் சிலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
77 அடி உயரத்தில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டச் சிலை, மடத்தின் 550 ஆண்டு பாரம்பரியத்தை முன்னிறுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சிலை உருவாக்கியவர் யார்?
இந்த சிறப்பு சிலையை வடிவமைத்தவர் இந்தியாவின் பிரபல சிற்பியுமான ராம் சுதார். குஜராத்தில் உள்ள ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) வடிவமைப்பில் பங்காற்றிய புகழ்மிக்க கலைஞர் ராம் சுதாரின் புதிய படைப்பாக இந்த ராமர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
விழா விபரங்கள்
மடத்தின் 550 ஆண்டு பாரம்பரியத்தை நினைவுகூரும் விழா நேற்று தொடங்கப்பட்டு
டிசம்பர் 7 வரை நடைபெறுகிறது.பிராண பிரதிஷ்டை பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்ற நிலையில்,
பிரதமர் மோட்டி இன்று ராமர் சிலையை திறந்து வைத்தார்.விழாவில் கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜு,
முதல்வர் பிரமோத் சாவந்த்,
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்
உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சிலையின் சிறப்பம்சங்கள்
மொத்த உயரம் – 77 அடி
முழுவதும் வெண்கலத்தால் செதுக்கப்பட்டது
பாரம்பரியம், கலாசாரம், கட்டிடக்கலை என அனைத்தையும் இணைத்து வடிவமைக்கப்பட்ட கலைப்பொக்கிஷம்

