
பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். இருவரும் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி வரும் நிலையில், விநாயகரின் ஆசீர்வாதம் பெற கோயிலுக்கு வந்ததாக பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரன்வீரின் பெற்றோர் ஜக்ஜித் சிங் பவ்னானி மற்றும் அஞ்சு பவ்னானி ஆகியோரும் தம்பதியுடன் கோயிலுக்கு சென்றனர். தீபிகா பாரம்பரிய உடையிலும், ரன்வீர் ஊதா நிற kurta மற்றும் வெள்ளை trousers-லும்தோன்றினர். கோயிலுக்குள் செல்லும்போது தீபிகாவின் கையை பிடித்தபடி ரன்வீர் நடந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதற்கு ஒரு நாள் முன்பு, ரன்வீர் சிங் மும்பையின் பிரபல Lalbaugcha Raja விநாயகர் பந்தலிலும் சாமி தரிசனம் செய்திருந்தார்.
2024-ல் முதல் குழந்தையான Dua பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், ரன்வீர்–தீபிகா தம்பதியினர் சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டிருந்தனர். தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கும் நிலையில் மீண்டும் அதே கோயிலுக்கு வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.