இன்று டிசம்பர் 24, புதன்கிழமை. தமிழ் வருடம் விசுவாவசு, தமிழ் மாதம் மார்கழி, நாள் 9. இன்று காலை 6.25 மணி வரை திருவோணம் நட்சத்திரமும், அதன் பின் அவிட்டமும் உள்ளது. காலை 11.41 மணி வரை சதுர்த்தி திதியும், பின்னர் பஞ்சமியும் அமைகிறது. இன்று மரண யோகம் இருப்பதால், முக்கிய முடிவுகளில் கவனம் அவசியம். நல்ல நேரம் காலை 9 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4.45 முதல் 5.45 மணி வரை. ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 வரை. சந்திராஷ்டமம் பூசம் நட்சத்திரத்திற்கு.

மேஷம்

பழைய சொத்துகளை நல்ல விலைக்கு விற்று, புதிய இடம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட சுபகாரியங்கள் வேகமாக நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

பாகப்பிரிவு தொடர்பான பிரச்னைகள் குறையும். பூர்வீகச் சொத்து பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டு விரிவாக்கத்திற்கான வங்கிக்கடன் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மிதுனம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த முரண்பாடுகள் விலகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். குழந்தைகள் விளையாடும் போது கவனம் தேவை. பேச்சுத் திறமையால் பங்குதாரர்களை சமாளிப்பீர்கள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்த்து, இறைவனை நினைத்து அமைதியாக இருப்பது சிறந்தது.

சிம்மம்

அயல்நாட்டிலிருந்து உதவி வரும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். மகளின் திருமண முயற்சிகள் வெற்றியடையும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

பிள்ளைகளின் பிடிவாதம் மாறும். அவர்களின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கல்வி மற்றும் கலைப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

உத்தியோகத்தில் வேகமாக பணிகளை முடிப்பீர்கள். கடன்கள் அடையும். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். நினைத்ததை முடித்துக் காட்டும் நாள்.

தனுசு

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். செலவுகளை சிரமத்துடன் சமாளிப்பீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

மகரம்

செல்வாக்கு உயரும். புதுச் சொத்துகள் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும்.

கும்பம்

சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனம் அவசியம். பிறருக்காக அடமான விவகாரங்களில் கையொப்பமிட வேண்டாம்.

மீனம்

கடன் சுமை குறையும். மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளில் அமைதி காக்க வேண்டும்.