கடலூர்: சிதம்பரம் அருகே கே.ஆடுர் கிராமத்தில் உள்ள குளத்தில் மீனவர்கள் வலை விரித்தபோது, அதில் மீனுக்கு பதிலாக முதலைக்குட்டி ஒன்று சிக்கியது.

அதிர்ச்சியடைந்த மீனவர்கள், சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட அந்த முதலைக்குட்டியை வலையுடன் சேர்த்து கவனமாக கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

முதலைக்குட்டி பாதுகாப்பாக கட்டப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்தக் குளத்தில் பெரிய முதலை இருப்பதாகவும், அதை பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.