‘தி பாய்ஸ்’ – 5-வது மற்றும் இறுதி சீசன் டிரெய்லர் வெளியீடு
சென்னை: ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஹாலிவுட் வெப் தொடர்களில் ஒன்று ‘தி பாய்ஸ்’. இதன் 4-வது சீசன் கடந்த ஆண்டு வெளியானது. இதில் வரும் சூப்பர் ஹீரோக்கள் பெரும்பாலும் இருண்ட வாழ்க்கை நடத்துபவர்களாக – மது, மாது, சூது என வாழும் குணாதிசயங்களுடன் – சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களை எதிர்த்து போராடுவதே கதையின் மையம்.
இந்த தொடர் பல்வேறு விருதுகளை வென்றதுடன், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் தமிழிலும் வெளியாகியுள்ளது. தற்போது, இதன் 5-வது மற்றும் இறுதி சீசன் உருவாகி வருகிறது.
இந்த சீசனில் டேவிட் டிக்ஸ், கார்ல் அர்பன், ஜாக் குவைட், ஆண்டனி ஸ்டார், எரின் மோரியார்டி, ஜெஸ்ஸி டி. அஷர், லாஸ் அலோன்சோ, சேஸ் கிராபோர்ட், டோமர் கபோன், கரேன் புகுஹாரா, கோல்பி மினிபை உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.